எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு

எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்

ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்

சுவிஸ் சூரிச் மாநிலத்திலிருந்து எழுச்சியுடன் ஐ.நா நோக்கிய நடைபயணம் ஆரம்பம்.

சிவந்தனின் ஐ.நாசபை நோக்கி நகரும் கால்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் சூரிச் மாநிலத்திலிருந்து 3 இளையோர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து சற்றுமுன் நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளனர். காலை 9 மணியளவில் சூரிச் ர்நடஎநவiயிடயவண ல் அகவணக்கத்துடன் ஆரம்பித்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மக்களுடைய ஆதரவுடன் nஐநீவாவை நோக்கிய தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

செல்வராஜா வைகுந்தன், விபுலானந்தன் கௌரிதாசன், சிவராசா ஜெயானந்தன் ஆகியோரே சூரிச், அறோ, சொலத்தூண், பேர்ண், பிறைபூர்க், லவுசான், மற்றும் ஜெனீவ் ஊடாக சுமார் 300 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் குறிபபிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எம்முடன் இணைந்து ஏற்பாடுகளை முன்னெக்க விரும்புபோர் என்முடன் தொடர்புகொள்ளுமாறு அறியத்தருகிறோம்.

நளை ஒல்னர் பிரதேசத்தை இளையோர்கள் வந்தடைவதால் ஒல்ரனன் பிரதேச மக்கள் தங்களது ஆதரவை வழங்கவேண்டுமென வேண்டிக்கொள்கப்படுகின்றனர்.

• சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
• தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
• மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப்பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுட்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட இருப்பதுடன், எமது மக்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இவர்கள் மூவரும் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புகளுக்கு
079 308 06 69
079 301 59 95
079 928 25 00

சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி நடை பயணம்

சிவந்தனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொள்ள தமிழின உணர்வாளர்கள் மூவர் தன்னெழுச்சியாக முன்வந்துள்ளனர்.

• சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
• தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
• மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 09:30 மணியளவில் சூரிச் ஹெல்விற்சியாபிளட்ஸ் (Helvetiaplatz) இல் இருந்து மூவர் இந்த நடை பயணம் ஆரம்பிக்க இருக்கின்றனர்.

செல்வராஜா வைகுந்தன், விபுலானந்தன் கௌரிதாசன், சிவராசா ஜெயானந்தன் ஆகியோரே சூரிச், அறோ, சொலத்தூண், பேர்ண், பிறைபூர்க், லவுசான், மற்றும் ஜெனீவ் ஊடாக சுமார் 300 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப்பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுட்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது சிவந்தனின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட இருப்பதுடன், எமது மக்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இவர்கள் மூவரும் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புகளுக்கு
079 308 06 69
079 301 59 95
079 928 25 00

புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது.

Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர்.

நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றதுடன், இன்று காலையும் மழை பெய்து வருகின்றது.

நேற்றைய மனிதநேய நடை பயணத்தில் 12 அகவையுடைய பைரவி என்ற சிறுமி 20 கிலோமீற்றர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து, சிவந்தனின் கோரிக்கைக்கான தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 772 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன், ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 203 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஐரோப்பிய தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கில் மக்கள் ஐ.நா முன்றலில் அணி திரள்வர் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும்

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 19வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.
இன்று காலையில் Baigneux-Les-Juifs என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 8 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 41 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலையில் இணைந்து நடந்திருந்தனர்.

சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றி பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்டறிந்து அதனை ஏனையவர்களும் அறியச்செய்து வருகின்றனர்.

பரிஸ் நகரில் இருந்து 301 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே லண்டனில் 130 கிலோமீற்றரும், கலைசில் இருந்து பரிஸ் நகர்வரை 296 கிலோமீற்றரும் அவர் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 727 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார்.

லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டிருக்கின்றார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிவந்தனின் நல்லாசி வேண்டி சிறப்பு பூஜை

தமிழ் மக்களின் விடிவிற்காக தனித்து நின்று பிரித்தானியாவிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தனின் நல்லாசி வேண்டி கோண்டாவிலில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

சுவிஸில்

சுவிஸில் உள்ள சிவன்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை சிவந்தனின் பயணம் வெற்றியடையவும் தொடர்ந்தும் சிறீலங்கா முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம் உறவுகளின் ஆத்ம பலம் வேண்டியும் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றுள்ளது.

பாரிஸில்

சிவந்தனின் நடைப்பயணம் வெற்றி பெறவும் சிவந்தனின் ஆரோக்கியம் வேண்டியும் பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் அதிகளவில் இணையும் இளையோர்கள்

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 18வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.

இன்று காலையில் Villaines-en-Duemois என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 10 பேர் வரையில் இணைந்து நடப்பதுடன், இதுவரை 6 கிலோமீற்றர்கள் அவர்கள் நடந்துள்ளனர். Dijonநோக்கி இவர்கள் நடந்து செல்லுகின்றனர்.

நேற்று 43 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 60 பேர் வரையில் இணைந்து நடந்திருந்தனர். இவர்களில் இளையோர்கள் பலர் காணப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் 43 கிலோமீற்றர்களும் முழுமையாக நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிஸ் நகரில் இருந்து 260 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் சிவந்தன் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐ.நா முன்றல் 20ஆம் திகதி எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 17 நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உண்ணாநிலையுடன் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவதால், தனது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று தான் உண்ணாநிலையை மேற்கொள்வதாக சிவந்தன் கூறினார்.

நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடக்க 11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தன், இன்று 8 பேர் இணைந்து நடக்க தனது நடை பயணத்தைத் தொடருகின்றார். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

நேற்றைய 40 கிலோமீற்றர் தூர நடை பயணத்தில் சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் 40கிலோமீற்றர் தூரமும் நடந்து சென்றிருந்த அதேவேளை, சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

15வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார்.

Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர்.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருப்பதுடன், இந்த மக்களுடனான சிறிய சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் இருந்து 129 கிலோமீற்றர் தூரம் சென்றுள்ள சிவந்தன், ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) எழுச்சிக் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மனு கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது

தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு 12வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை அடைவதற்கு இன்னும் 610 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

இன்று காலை முதல் நண்பகல்வரை 20 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் 15பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். Bonneuil-sur-marne என்ற இடத்தில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் அவர், Sucy-en-brie என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்.

பரிஸ் நகரில் இருந்து சிவந்தனையும், அவரது குழுவினரையும் வழியனுப்பி வைத்த மக்கள், உலர் உணவுப் பொருள்களையும், சத்துணவுப் பொருள்களையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் (கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்).

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

http://www.sangathie.com/index.php/news/10590/51/610

பிரித்தானியாவில் இருந்து ஐ, நா முன்றல் வரை ஈழத்தழிழனின் நடைப்பயணம்(தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு)

In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reached