எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
சிவந்தன் ஜெனீவாவை அடைய இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும்
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 19வது நாளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.
இன்று காலையில் Baigneux-Les-Juifs என்ற இடத்தில் இருந்து ஆரம்பித்த நடை பயணத்தில் சிவந்தனுடன் 8 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 41 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலையில் இணைந்து நடந்திருந்தனர்.
சிவந்தனின் மனிதநேய நடை பயணம் பற்றி பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்டறிந்து அதனை ஏனையவர்களும் அறியச்செய்து வருகின்றனர்.
பரிஸ் நகரில் இருந்து 301 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், ஜெனீவாவை சென்றடைவதற்கு இன்னும் 245 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே லண்டனில் 130 கிலோமீற்றரும், கலைசில் இருந்து பரிஸ் நகர்வரை 296 கிலோமீற்றரும் அவர் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 727 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார்.
லண்டனில் இருந்து ஜெனீவாவரை 900 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தை 28 நாட்களில் நடந்து கடக்கும் மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டிருக்கின்றார்.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வும், மனு கையளிப்பும் நடைபெற இருக்கின்றன.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.