தமிழ் மக்களின் விடிவிற்காக தனித்து நின்று பிரித்தானியாவிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தனின் நல்லாசி வேண்டி கோண்டாவிலில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
சுவிஸில்
சுவிஸில் உள்ள சிவன்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை சிவந்தனின் பயணம் வெற்றியடையவும் தொடர்ந்தும் சிறீலங்கா முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம் உறவுகளின் ஆத்ம பலம் வேண்டியும் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றுள்ளது.
பாரிஸில்
சிவந்தனின் நடைப்பயணம் வெற்றி பெறவும் சிவந்தனின் ஆரோக்கியம் வேண்டியும் பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்