தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டித்து இலண்டனில் இருந்து எதிர்வரும் ஜூலை 23ம் திகதி ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணம்.
இவ் எழுச்சி நடைப்பயணத்தின் முடிவில் இன் நான்கு அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மகஜரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
1) இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்படும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலையை சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டும்.
2) போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஐகிய நாடுகள் சபை நியமித்த நிபுணர் குழு உடனடியாக சுயாதீனமாக செயற்பட்டு போர்க்குற்றவாளிகள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்கப்படவேண்டும் (இது தொடரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வழிவகுக்கும்!).
3) முட்கம்பி வெளிகளுக்குப் பின்னால் இன்னும் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக அவர்களது சொந்த இடங்களில் வாழவும், எனைய தமிழ் மக்களும், இராணுவக் கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரக்குடிமகனாக வாழ உறுதிசெய்யவேண்டும்.
4) கைதுசெய்யப்பட்டோர், சரணடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களுடைய பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு அவரகள் கண்டுபிடித்து தரப்படவேண்டும்.
என ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக்கங்களை கோரிக்கைகளாக்கி சுமந்து ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணத்தை தொடரும் சிவந்தன் என்ற ஈழ உணர்வாளனுக்கு உங்களது பேராதரவை வழங்கி ஊக்கு விக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.